என் மகனை அதிகம் நேசிக்கிறேன்.... தற்கொலைக்கு முன் தாய் எழுதி வைத்த உருக்கமான வரிகள்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் அதிக மனநல பிரச்சனைகள் காரணமாக தாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்த வழக்கினை நீதிமன்றம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த கார்லி ஹெமிங்க்ஸ் என்ற பெண் கடந்த 7 வருடங்களாகவே மனநல பிரச்சனைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். அதிலிருந்து மீள நினைத்த கார்லி மது பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்தார்.

இதனால் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து டிசம்பர் 11ம் தேதியன்று உதவி கேட்டு அவசர பொலிஸாருக்கு அழைப்பு விடுத்தார். அதில், "நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? என்னுடைய தந்தை என்னை கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை" என கூறிவிட்டு போனை வைத்துள்ளார்.

எந்த ஒரு தெளிவான முகவரியும், விளக்கமும் இல்லாததால் பொலிஸார் பெரிதும் குழப்பம் அடைந்துள்ளனர்.

அடுத்த 10 நிமிடங்களில் அவரது தொலைபேசி அழைப்பை வைத்து வீட்டை அடைந்த பொலிஸார் உள்ளே நுழைந்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில், கார்லி சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அங்கு வீட்டின் சுவற்றில், "என்னுடைய அப்பா இந்த நிலையில் என்னை பார்க்க வேண்டாம். என் மகனை நான் மிகவும் நேசிப்பதாக கூறிவிடுங்கள்" என இறப்பதற்கு முன் எழுதியிருந்த வரிகளை பொலிஸார் கண்டறிந்தனர்.

இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிமன்றம், கார்லி தற்கொலை செய்துகொண்டு இறந்ததை உறுதி செய்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்