விலங்குகள் நல ஆர்வலரை மிருகத்தனமாக தாக்கிய பெண்: சட்டத்திற்கு தப்பினாலும் மரணம் விடவில்லை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

விலங்குகள் நல ஆர்வலர் ஒருவரை கொஞ்சம் கூட மன சாட்சியின்றி தாக்கிய ஒரு பெண், நீதிமன்றத்தின் தண்டனையில் தப்பினாலும் மரணம் அவரை விடவில்லை.

விலங்குகள் நல ஆர்வலர் ஒருவரை குதிரையேற்ற வீராங்கனையாகிய Jane Goring (57) என்னும் ஒரு பெண் சவுக்கினால் முரட்டுத்தனமாக தாக்கும் ஒரு வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்றாலும், பின்னர் அவருக்கு எதிராக போதுமான சாட்சியம் இல்லை என்று கூறி நீதிமன்றம் Janeஐ விடுவித்தது.

பின்னர் இன்னொரு வழக்கில் அவர் மீது சாட்டப்பட்ட குற்றத்தின் அடிப்படையில் அவர் சிறைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஆனால் சிறைக்கு செல்வதற்கு முன்னாகவே நேற்று முன் தினம் இன்னொரு குதிரையேற்ற விளையாட்டில் குதிரையில் இருந்து விழுந்த Jane பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த செய்தி வெளியானதும் அவரது குடும்பத்தினர் Janeஇன் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்திருந்தாலும் அந்த வீடியோவைப் பார்த்திருந்தவர்கள் எதிர்மறையாக கருத்து தெரிவித்திருந்தனர்.

Jane இறந்ததில் தங்களுக்கு வருத்தம் இல்லை என்றே சிலர் ட்வீட் வெளியிட்டிருந்தனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers