பொது இடத்தில் மனைவிகளுடன் நெருக்கம் காட்டும் அண்ணன்- தம்பி! வைரல் படங்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

முதல் உலகப்போரில் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த போர் வீரர்களை கௌரவிக்கும் வகையில் பிரித்தானிய ராஜ குடும்பத்தினர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் வழக்கத்துக்கு மாறாக பிரித்தானிய இளவரசர் வில்லியம் தன் தம்பி ஹரி செய்யும் ஒரு விடயத்தை பின்பற்றியதை பத்திரிகையாளர்களின் கெமராக்கள் விடாமல் பிடித்துக் கொண்டன.

வழக்கமாக இளவரசர் ஹரிதான் பொது இடங்களில் தன் மனைவியிடம் நெருக்கம் காட்டுவார்.

மனைவியின் கைகளைப் பிடித்துக் கொள்வதும், அவரது முதுகில் ஆதரவாக கைகளை வைத்துக் கொள்வதும், கண்களால் காதல் பேசுவதுமாக ஹரி மேகனின் கெமிஸ்ட்ரி உலகறிந்தது.

ஆனால் இளவரசர் வில்லியமும் கேட்டும் பொதுவாக அந்த அளவுக்கு நெருக்கம் காட்டுவதில்லை, கேட் கர்ப்பமாக இருக்கும்போது மட்டும் ஓரிரு முறை வில்லியம் அவரை ஆதரவாக பிடித்துக் கொண்டிருக்கிறார், அவ்வளவுதான்.

இம்முறை அண்ணனும் தம்பியும் அதுவும் ஒரேமாதிரி தங்கள் மனைவிகளை ஆதரவாக அழைத்துச் செல்லும் படங்கள் வெளியாகியுள்ளன.

அவற்றைப் பார்த்தால் வில்லியமும் ஹரியைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டாரோ என்றே தோன்றுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்