அம்மா என்னை மன்னித்து விடுங்கள்: புற்றுநோய்க்கு பலியான குழந்தையின் கடைசி வார்த்தைகள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

அபூர்வ வகை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன், உயிரிழக்குமுன் தன் தாயிடம் அம்மா இத்தகைய சூழல் ஏற்பட்டதற்காக வருந்துகிறேன் என்று கூறிவிட்டு உயிர் விட்ட சம்பவம் ஒன்று பிரித்தானியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Accringtonஐச் சேர்ந்த Charlie Proctor என்னும் அந்த சிறுவனுக்கு 2016இல் அபூர்வ வகை கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டது.

அவன் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வான் என சென்ற மாதம் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

அவனைக் காப்பாற்றுவதற்கு 855,580 பவுண்டுகள் தேவை. அவனது சிகிச்சைக்காக அவனது பெற்றோரான Amber Schofield (24)மற்றும் Ben Proctor பணம் சேகரித்து வந்தனர்.

ஆனால் பாதி தொகை மட்டுமே சேர்ந்திருந்த நிலையில், சனிக்கிழமை இரவு Charlie தனது தாயின் கைகளில் தனது உயிரை விட்டு விட்டான்.

புற்றுநோய் பணக்காரர்களின் நோய், அதிக பணம் உங்களிடம் இருந்தால் உங்கள் குழந்தையை காப்பாற்றலாம், நாங்கள் பணக்காரர்களாக இல்லததால் என் குழந்தை இறந்தான் என்னும் விடயம் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் Charlieயின் தாய்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்