பிரித்தானிய மகாராணியை பின்னுக்குத் தள்ளிய ஹரி: எதில் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

சமீபத்திய ஆய்வு ஒன்றில் ராஜ குடும்பத்தினரில், இளவரசர் ஹரி பிரித்தானிய மக்களிடையே மிகவும் பிரபலமானவராக திகழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

YouGov என்னும் அமைப்பு, இந்த ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதிக்கும் அக்டோபர் 31ஆம் திகதிக்கும் இடையில் 3,700 முறை மக்களிடம் நடத்திய நேர்காணல்களின் முடிவு இவ்வாறு தெரிவிக்கிறது.

அரியணையேறும் வரிசையில் ஆறாவதாக உள்ள இளவரசர் ஹரி, 77 சதவிகித வாக்குகள் பெற்று தனது பாட்டியாகிய மகாராணியாரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

அவரை அடுத்து வரும் பிரித்தானிய மகாராணிக்கு 74 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன.

மூன்றாவது இடத்தைப் பிடிப்பவர் இளவரசர் வில்லியம், அவருக்கு 73 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன.

ஹரியை அவரது ரசிகர்கள், புகழ்ச்சிக்குரியவர், விரும்பத்தக்கவர், நகைச்சுவை உணர்வு கொண்டவர், வேடிக்கை விரும்பி மற்றும் உண்மையானவர் என்கின்றனர்.

இந்த வாரத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கும் வருங்கால மன்னராகிய இளவரசர் சார்லஸ் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அவரை அவரது மருமகள்கள் இருவரும் பின்னுக்குத் தள்ளியுள்ளனர். இளவரசி கேட் 64 சதவிகித வாக்குகளுடன் நான்காவது இடத்திலும், ஒரு அமெரிக்க நடிகையாக இருந்து பிரித்தானிய ராஜ குடும்பத்தில் இடம்பிடித்துள்ள மேகன் 55 சதவிகித வாக்குகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.

மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப் 56 சதவிகித வாக்குகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

சமீபத்தில் திருமணமான இளவரசி யூஜீன் 14ஆவது இடத்தில் இருக்கிறார். முதலிடத்தைப் பிடித்துள்ள ஹரியைப் பொருத்தவரையில், 7 சதவிகிதத்தினர் அவரை குறித்து எதிர்மறையான கருத்துக்களும், 13 சதவிகிதத்தினர் நடுநிலையான கருத்துகளும் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers