லண்டனில் கர்ப்பிணிப்பெண்ணின் உயிரைக் குடித்த அம்பு: உயிருக்கு போராடும் குழந்தை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பிரசவத்திற்கு இன்னும் நான்கு வாரங்களே உள்ள நிலையில் அம்பு பாய்ந்து ஒரு கர்ப்பிணிப்பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

லண்டனில் Sana Muhammad (35) என்னும் எட்டு மாத கர்ப்பிணிப்பெண்ணை 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் வில் அம்பினால் தாக்கினார்.

அதனால் சம்பவ இடத்திலேயே Sana, தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளின் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

அம்பு Sanaவின் இதயத்தைத் துளைத்தது என்றாலும் அவரது வயிற்றிலிருந்த குழந்தையைத் தொடவில்லை.

உடனடியாக அம்புடனேயே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Sanaவின் உடலிலிருந்து அந்த அம்பை அகற்றினால், அவரது குழந்தையை மீட்டெடுப்பதற்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், அம்பை அப்படியே விட்டு விட்டு குழந்தையை அறுவை சிகிச்சை முறையில் எடுத்தனர் மருத்துவர்கள்.

குழந்தையை மீட்டெடுக்க முடிந்தது என்றாலும், அது உயிரற்ற உடலிலிருந்து எடுக்கப்பட்டதன் காரணமாக ஆபத்தான நிலையில் இருப்பதால், தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அதற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மனைவியையும் இழந்து, குழந்தைக்கு என்ன ஆகுமோ என்ற கவலையும் சேர, தனது மூன்று குழந்தைகளுக்கு ஆறுதல் கூற இயலாத நிலையில் அதிர்ந்து போயுள்ளார் Sanaவின் கணவரானImtiaz Muhammad.

தொடர்ந்து லண்டனில் கொலைகள் நடந்து வரும் நிலையில், Sana, வன்முறைக்கு பலியான 120ஆவது நபராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers