பிரித்தானியாவில் மர்மமாக இறந்து கிடந்த இளம் பெண்: கணவரை பற்றி வெளியான பகீர் தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் இளம் பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடந்த நிலையில், இந்த பெண்ணின் கணவர் அவருக்கு உண்மையாக இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் Middlesbrough-ல் இருக்கும் Linthorpe பகுதியில் Mitesh Patel(37), இவரின் மனைவி Jessica(34) ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இருவரும் Linthorpe-ல் மருந்து கடையில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இந்த கடை அவர்களின் சொந்த கடை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மே மாதம் 14-ஆம் திகதி Jessica வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதனால் இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டதில் ஒருவரை கைது செய்தனர். அதன் பின் இது குறித்த வழக்கு Teesside Crown நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் Jessica திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த கொலையை அவரது கணவரான Mitesh Patel செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவரைப் பற்றி சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் மனைவிக்கு உண்மையாக இல்லை எனவும், ஆண்களுக்கான இணையதளம் என்று கூறப்படும் Grindr சைட்டில் இவர் பல ஆண்களிடம் பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி சில நம்பமுடியாத தகவல்களும் கிடைத்துள்ளன. ஆனால் அது உறுதி செய்த பின்னரே தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த விசாரணை நீதிமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது இது தொடர்பான விசாரணையின் போது நீதிபதிகள் மூன்று அல்லது அதற்கு மேலான நீதிபதிகள் இருப்பர்.

Mitesh Patel-னின் மெடிக்கல் ஷாப்பிற்கு பலர் சென்று வந்துள்ளனர். அப்போது நீதிபதிகளின் பழக்கமும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், அந்த மெடிக்கல் ஷாப்பில் பொருட்கள் வாங்கியிருந்த நீதிபதிகள் இந்த விசாரணைக்கு நீதிபதியாக இருக்கமாட்டர்கள் என்று தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி இது நன்கு திட்டமிட்ட கொலை என்பது தெரிகிறது. இதில் எந்த ஒரு பாகுபாடும் கிடையாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆனால் Mitesh Patel தான் இந்த கொலையை செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை அடுத்து வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers