மேகன் மெர்க்கலால் கடும் நெருக்கடிக்கு உள்ளான பிரித்தானிய அரச குடும்பம்: இந்த முறை என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவியால் அரச குடும்பம் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளது.

இளவரசர் ஹரியை மேகன் மெர்க்கல் திருமணம் செய்து கொண்டாலும் இன்னமும் அவர் அமெரிக்க குடிமகளாகவே உள்ளார்.

இதனால் ஆண்டுதோறும் தமக்கான சொத்து வரியை அமெரிக்காவுக்கு செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

மேகன் மெர்க்கல் பிரித்தானிய குடிமகளாக சட்டப்படி மாறுவதற்கு சில காலம் ஆகலாம் என கூறப்படுகிறது.

அதுவரையில் அமெரிக்க அதிகாரிகளுக்கு தன் மீதான அனைத்து சொத்து விவரங்களையும் தெரியப்படுத்த வேண்டும்.

இதில், மேகன் மெர்க்கலுக்கு இதுவரை கிடைக்கப்பெற்ற பரிசுப்பொருட்கள், அரச குடும்பத்து உறுப்பினர் என்பதால் அவருக்கு கிடைக்கப்பெறும் வருவாய் உள்ளிட்ட அனைத்தும் தெரியப்படுத்த வேண்டும்.

மட்டுமின்றி, அமெரிக்க சட்டத்திட்டத்தின்படி மேகன் மெர்க்கலின் கணவரான இளவரசர் ஹரியின் சொத்துக்களின் விவரங்களும் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய இக்கட்டான சூழல் எழுந்துள்ளது.

அந்தவகையில் மறைந்த பிரித்தானியா இளவரசி டயானாவின் பெயரில் நிறுவப்பட்டிருந்த அறக்கட்டளை நிதியான 20 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேகன் மில்லியன் அமெரிக்க அரசுக்கு வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இளவரசர் ஹரியின் மனைவி என்பதால் மேகனின் பெயரும் அந்த அறக்கட்டளை நிதி தொடர்பில் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியால் இளவரசர் ஹரி ஆண்டுக்கு சுமார் 300,000 பவுண்டுகள் ஆதாயம் ஈட்டி வருகிறார். ஆனால் அவர் பிரித்தானிய அரசுக்கு வரியும் செலுத்தி வருகிறார்.

மேகன் மெர்க்கலால் தற்போது பிரித்தானிய அரச குடும்பத்தினரின் சொத்து விவரங்கள் அமெரிக்க அரசுக்கு தெரியவரும் என்பது மட்டுமல்ல, ஒரே சொத்துக்கு பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் வரி செலுத்தும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பக்கிங்ஹாம் அரண்மனை இந்த விவகாரம் தொடர்பில் உரிய முடிவுகளை மேற்கொள்ள அதிகாரிகள் குழு ஒன்றை நியமித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்