பிரித்தானிய மகாராணியின் பாதுகாவலர்கள் நள்ளிரவில் செய்த மோசமான செயல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
523Shares

பிரித்தானிய மகாராணியில் பாதுகாவலர்கள் ஐந்து பேர் குடித்துவிட்டு நள்ளிரவில் கபாப் கடை ஒன்றில் கலாட்டா செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நடக்கும்போது மகாராணியார் அருகிலுள்ள அரண்மனையில்தான் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுபான விடுதி ஒன்றிற்கு சென்று நன்றாக குடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்ட அந்த வீரர்கள் கபாப் விற்பனை செய்யும் கடை ஒன்றிற்கு சென்று அங்கு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த காட்சிகள் அருகிலிருந்த CCTVகெமரா ஒன்றில் பதிவாகியுள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தையடுத்து பொலிசார், 21,22,23, 26 மற்றும் 27 வயதுடைய ஐந்து பாதுகாவலர்களை கைது செய்துள்ளனர்.

Windsor Castle அருகில் நடந்த கைகலப்பை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டதை ராணுவமும் உறுதி செய்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்