சிறையில் வைத்தே துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பெண் குற்றவாளிகள்: சிறை நிர்வாகத்தின் நடவடிக்கை

Report Print Vijay Amburore in பிரித்தானியா
394Shares

ஸ்காட்லாந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநங்கை சக பெண் குற்றவாளிகளிடன் உறவு வைத்துக்கொண்டிருந்ததை அடுத்து அவருக்கு பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தை சேர்ந்த பாரிஸ் கிரீன் (27) என்ற திருநங்கை கடந்த 2011ம் ஆண்டு 45 வயதான Shankland என்பவரை பாலியல் துன்புறுத்தல் செய்து கொடூரமாக கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் சிறையில் 2013ம் ஆண்டு அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் சிறையில் இருக்கும் பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டிருக்கும் போது பிடிபட்டுள்ளார்.

இதனையடுத்து சிறையில் இருந்து 1000 கிமீ தொலைவில் பிரைட்டன் பகுதியில் அமைந்துள்ள மருத்துவனையில் அவருக்கு பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது பெண்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரிஸிற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறை நிர்வாக அதிகாரி கூறுகையில், 2011ம் ஆண்டு பாரிஸ் ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டதால் தான் அவர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு முழுமையான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவிட்டது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில், முதன்முறையாக ஒருவருக்கு பாலின மறுசீரமைப்பு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுவது இதுவே முதன்முறையாகும் என தெரிவித்துள்ளார்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்