பிரித்தானியாவில் திருமணம் முடிந்த 7-வது நாளில் பரிதாபமாக இறந்த இளம் பெண்: மனதை உருக்கும் சம்பவம்

Report Print Santhan in பிரித்தானியா
328Shares

பிரித்தானியாவில் புற்று நோயின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த காதலியை காதலன் திருமணம் செய்த நிலையில், அவர் அதன் பின் சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோதனையை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோடி Alex(38) இவரும் Samantha (33) என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் ஜிம்மில் சந்தித்து கொண்டனர். முதலில் எதிரிகள் போன்று இருந்த இவர்கள் அதன் பின் காதலர்களாக மாறியுள்ளனர்.

நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் காதல் வாழ்க்கையில், ஒரு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. அதாவது கடந்த ஜுன் மாதம் Samantha-வுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படவே, மருத்துவர்கள் சோதித்து பார்த்த போது புற்றுநோய் இருப்பதை அறிந்துள்ளனர்.

ஆசிரியரான சமந்தா Royal Shrewsbury மருத்துவமனையில் மூன்று வாரங்கள் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின் மான்செஸ்டரில் இருக்கும் Christy மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து Severn மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். 8 அல்லது 10 மாதங்களுக்கு முன்பே அழைத்து வந்திருந்தால், காப்பாற்ற முயற்சி செய்திருக்கலாம், ஆனால் தற்போது புற்றுநோயின் தாக்கம் அதிகம் உள்ளது, எப்போது வேண்டும் என்றாலும் இறக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து Samantha-வுக்கு டிரா Alex-ஐ திருமணம் செய்ய வேண்டும் ஆசை, இதனால் இவர்களின் திருமணம் பெற்றோரின் சம்மதத்துடனே செப்டம்பர் மாதம் 1-ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான உறவினர்கள் வந்திருந்தனர். இருப்பினும் திருமணம் முடிந்த அடுத்து சில நாட்களில் செப்டம்பர் 7-ஆம் திகதி சமந்தா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார்.

இருப்பினும் மருத்துவமனையில் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்ட போது, மகிழ்ச்சியாக இருந்த புகைப்படம் தற்போது வெளியாகி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

மேலும் அவரின் காதலன் அலெக்ஸ், அவளுக்கு மது அருந்துவதோ, போதை பழக்கமோ எதுவும் கிடையாது. தண்ணீர் குடிப்பாள். நன்றாக உடலை வைத்து கொள்வாள். ஆனால் இது எப்படி என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்