விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்: பணம் இல்லாமல் இரவில் தவித்த பரிதாபம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிவை சேர்ந்த கர்ப்பிணி பெண், பாதியில் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதால் கையில் காசு கூட இல்லாமல் நடு இரவில் அழுதுகொண்டிருந்துள்ள பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த பில்லி என்ற 20 வார கர்ப்பிணி தன்னுடைய மருமகள் மற்றும் தோழியுடன் விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு சுற்றுலாவை முடித்த பில்லி, ஜேஎஃப்கே விமான நிலையத்திலிருந்து மான்செஸ்டர் நோக்கி வரும் வர்ஜின் அட்லாண்டிக் விமானதிற்காக விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

40 நிமிடங்களுக்கு மேலாகியும் விமானம் புறப்படாததால், உடல் வெப்பநிலை அதிகரித்து பில்லி வாந்தி எடுக்க வருவதை போல உணர்ந்துள்ளார்.

உடனே அங்கிருந்த விமான பணிப்பெண்ணிடம் ஒரு பிளாஸ்டிக் பை கேட்டுள்ளார். உள்ளே சென்ற அந்த பணிப்பெண், விமான ஊழியர் ஒருவருடன் அங்கு வந்து, உங்கள் உடல்நிலை மோசமாக இருப்பதால், மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னர் வேறு விமானத்தில் செல்லலாம் எனக்கூறி விமானத்தில் இருந்து தரையிறக்கியுள்ளனர்.

விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்ட பில்லியிடம், அவருடைய ஏடிஎம் அட்டை இருக்கும் பையினை ஒப்படைக்க விமான நிர்வாகம் மறந்துவிட்டது.

அங்கிருந்த வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் சென்ற பில்லி, தன்னுடைய ஒரு பையினை மறந்துவிட்டதாக புகார் கூறியுள்ளார். ஆனால் அந்த விமான நிர்வாகம், உங்களுடைய அந்த பை தற்போது கிடைக்கவில்லை என அலட்சியமாக பதிலத்துள்ளது.

ஹோட்டலில் தங்குவதற்கோ, சாப்பிடுவதற்கோ கையில் பணமில்லாமல் இருப்பதை நினைத்த பில்லி, என்ன செய்வதென தெரியாமல் விமான நிலையத்தில் அழுதுகொண்டிருந்துள்ளார்.

மறுநாள் தன்னுடைய, பயண காப்பீட்டின் மூலம் ஒரு அறை எடுத்து தங்கியிருந்த பில்லிக்கு விமான நிர்வாகத்திலிருந்து அழைப்பு வந்தது. அதில், மருத்துவ பரிசோதனை தேவையில்லை. உங்களை மாற்று விமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

உடனே விமானத்தில் பிரித்தானியா வந்தடைந்த பில்லி, செய்தியாளர்களை சந்தித்து நடந்தவை பற்றி கூறினார். அவர், என்னுடைய உடல்நிலையை எந்த மருத்துவரும் வந்து பரிசோதனை செய்யவில்லை. அவர் என்னை வந்து பார்க்க கூட இல்லை.

ஆனால் என்னுடைய உடல்நிலை மோசமாக உள்ளது எனக்கூறி இறக்கிவிட்டனர். நள்ளிரவு 1 மணிக்கு நான் பெரிதும் கவலையடைந்தேன். எனக்கு வேறு எதுவும் வேண்டாம். விமான நிர்வாகம் ஒரு மன்னிப்பு கேட்டால் போதும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்