6 வயது மகளுக்கு உதட்டில் முத்தம் கொடுத்ததோடு இல்லாமல் தந்தை செய்த செயல்: வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் தன்னுடைய 6 வயது மகளுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த தந்தை, நடுவிரலை காண்பித்தது தற்போது சமூகவலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

பிரித்தானியாவின் Liverpool பகுதியைச் சேர்ந்தவர் Ian. 42 வயதான இவர் கடந்த புதன் கிழமை தன் மகளுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அதில் தன்னுடைய 6 வயது மகளுக்கு உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். அதோடு மட்டுமின்றி இவர் முத்த கொடுக்கும் போது, நடு விரலை காண்பிக்க, அதே போன்று அவரது மகளும் காண்பித்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலரால் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

6 வயது சிறுமியின் உதட்டில் முத்தம் கொடுப்பதே தவறு, இதில் இது போன்று ஒரு ஸ்டில்லா எனவும், ஒரு சிலர் தந்தை மகளின் பாசம் இதில் என்ன இருக்கிறது என்று இயானுக்கு ஆதரவாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதே போன்று தான் சில தினங்களுக்கு முன்பு பிரித்தானியாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தன்னுடைய மகளுக்கு உதட்டில் முத்தம் கொடுத்தார். அந்த புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers