ஹரி-மெர்க்கல் குடியேறப் போகும் வீட்டிற்கும் இந்தியருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு: சோக சம்பவம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் தம்பதியினர் குடியேறப்போகும் புதிய வீட்டிற்கும், இந்தியர் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வின்ட்சர் நகரிலுள்ள ராணி எலிசபெத் II இன் ஃபிரோமோர் ஹவுஸ், பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் தம்பதியினர் புதிய வீடு என சமீபத்தில் அரண்மனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

பிரித்தானிய ராணி விக்டோரியா, இந்திய குடிமகன் அப்துல் கரீமின் சேவையை அங்கீகரிக்கும் விதமாகவும், அவரது இந்திய உதவியாளர் மற்றும் நம்பிக்கைக்குரியவர் மீது அவரது பாசத்தைப் வெளிப்படும் ஒரு அடையாளமாகமாகவும் தான் வசித்த ஃபிரோமோர் ஹவுஸை பரிசாக அளித்தார்.

கரீம் 1887 ஆம் ஆண்டில் கோல்டன் ஜூபிலியில் ராணி விக்டோரியாவிற்கு ஒரு பரிசு கொடுப்பதற்காக ஆக்ராவில் இருந்து இங்கிலாந்து வந்திருந்தார். அப்போது ​​அவர் 24 வயதுடையவராக இருந்தார்.

அவர் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்த ராணி, அவருக்கு முனிசி (எழுத்தர் அல்லது ஆசிரியர்) பட்டம் வழங்கி கௌரவித்தார். பின்னர் அவரை இந்திய செயலாளராக நியமித்தார்.

விக்டோரியாவிடம் மிகவும் நெருக்கமானவராக பழகிய கரீமிற்கு, தன்னுடைய ஃபிரோமோர் ஹவுஸை சிறப்பு பரிசாக கொடுத்தார். அதன் பின்னர் பல கடிதங்கள் அவருக்கு தனிப்பட்டு எழுதியதோடு, பல பரிசுகளை கொடுத்து, வீட்டை அலங்கரிக்க வைத்தார்.

அதோடு இல்லாமல் அடிக்கடி அந்த வீட்டிற்கு சென்ற ராணி, கரீம் மற்றும் அவருடைய மனைவியுடன் தேயிலை அருந்தும் பழக்கத்தையும் கொண்டிருந்தார்.

இந்த சந்தோசம் ஒருபுறமிருக்க, மறுபுறம் இதன் சோகத்தையும் ஆரம்பித்தது. ராணி விக்டோரியாவின் இறுதி ஊர்வலத்திற்குப் பிறகு, புதிய மன்னனாக பொறுப்பேற்ற எட்வர்ட் VII, தன்னுடைய தாயிடம் இருந்து கரீமிற்கு எழுதப்பட்ட அனைத்து கடிதங்களையும் பறிமுதல் செய்து தீயிட்டு கொளுத்துமாறு உத்தரவிட்டார். மேலும், கரீம் உடனடியாக இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என கூறினார்.

அதன்படி பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து கடிதங்களும், ஃபிரோமோர் ஹவுஸிற்கு வெளியில் வைத்து தீயிட்டு கொளுத்தப்பட்டது. கரீமும் குடும்பத்துடன் ஆக்ராவிற்கு திரும்பி அனுப்பப்பட்டார் என ஸ்ராபாணி பாசு என்ற எழுத்தாளர் தன்னுடைய புத்தகத்தில் எழுதியிருந்தார்.

இந்த புத்தகமானமானது படமாக வெளிவந்து, இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்