கண்ணீருடன் ராஜினாமா கடிதத்தை கொடுத்த மெர்க்கல் உதவியாளர்: வெளிவந்த ரகசியம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மெர்க்கலின் தனி உதவியாளர் மெலிசா டூபாடி, கண்ணீருடன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரித்தானிய இளவரசியின் தனி உதவியாளராக பணிபுரிந்து வந்த 39 வயதான மெலிசா டூபாடி, கடந்த மே மாதம் முதலே மெர்க்கலுக்காக பணிபுரிந்து வருகிறார்.

மிகவும் சுறுசுறுப்பான மெலிசா, ஹரி - மெர்க்கல் திருமணத்தின் போது செய்த ஏற்பாடுகளை பார்த்து பலரும் வியந்து பாராட்டியதுண்டு. அதேசமயம் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களும் பாராட்டியதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

ஆனால் அந்த திருமணத்தின்போது இவருக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்துள்ளது. இளவரசர் ஹரி, மெர்க்கல் கேட்பதை ஊழியர்கள் கொடுப்பதில்லை என மெலிசாவை கோபத்துடன் சத்தமாக கடிந்துகொண்டுள்ளார். மேலும், தன்னுடைய மனைவிக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கவில்லை என இளவரசர் வில்லியம் மீது கோபம் அடைந்ததாகவும் தெரிகிறது.

கடந்த வாரத்தில் வின்ட்சர் கோட்டையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ்ஸ் சேப்பலில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, ஆலயத்தில் வீசிய காற்றின் வாசம் அருவருப்பாக இருந்துள்ளது.

மெர்க்கல் கூறியதால் அதனை மாற்றும்படி சேவகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு சேவகர்கள், மகாராணியை கேட்காமல் மாற்ற முடியாது என மறுப்பு தெரிவித்து மெலிசாவை கடிந்து கொண்டு அங்கிருந்து வெளியேற்றியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, மெர்க்கல் அதிகாரத்துடன் செயல்பட்டு மெலிசாவிற்கு அதிக அழுத்தம் கொடுத்தது தான் காரணம் என மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. ஒருமுறை, கேட் உடன் ஏற்பட்ட காரசாரமான வாதத்தின் போது, மெர்க்கல் அசிங்கமான வார்த்தை பயன்படுத்தி ஊழியர்களை திட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேகன் வைத்த அதிகமான கோரிக்கைகளால் மெலிசா கண்ணீர் வடித்துள்ளார்.

ஆனால் இந்த விவகாரம் குறித்து செய்தி தெரிவிக்க அரண்மனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால் பெரிதும் கவலையடைந்த மெலிசா கண்ணீருடன் தன்னுடைய ராஜினாமா கடித்தை கொடுத்துள்ளார்.

முன்னதாக மெலிசா, X-Factor நிகழ்ச்சியில் நடுவர்களாக பணியாற்றிய பிரபல தம்பதி ராபி வில்லியம்ஸ் -அய்டா பீல்டுக்கு தனி உதவியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்