இரண்டு மார்பகங்கள் இல்லாமல் இருக்கும் 3 குழந்தைகளின் தாய்: மேல் ஆடை இல்லாமல் கணவருடன் இருக்கும் புகைப்படத்தின் பின்னணி

Report Print Santhan in பிரித்தானியா

புற்றுநோயிலிருந்து தப்பிப்பதற்கு போராடிய லண்டனைச் சேர்ந்த பெண், தன்னுடைய இரண்டு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிய பின், கணவருடன் மேலாடை இல்லாமல் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Kingston-upon-Thames நகரைச் சேர்ந்தவர் Gemma Cockrell.

49 வயதான இவருக்கு மூன்று குழந்தைகள் ஜேம்ஸ் என்ற கணவரும் உள்ளனர்.

இந்நிலையில் Gemma Cockrell-ன் புகைப்படத்தை பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் இவர் இரண்டு மார்பகங்கள் இல்லாமல் உள்ளார்.

இது குறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Gemma Cockrell-க்கு கடந்த 2013-ஆம் ஆண்டு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனால் அவர் அதற்கான சிகிச்சைகள் மேற்கொண்டு தொடர்ந்து வேலைகளை செய்து வந்தார். அதன் பின் சில மாதங்கள் கழித்து புற்றுநோய் இருக்கும் பகுதி மட்டும் நீக்கப்பட்டது.

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பின் அதே பகுதியில் மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால், 2015-ஆம் ஆண்டு மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது அவரின் ஒரு மார்கம் முற்றிலும் நீக்கப்பட்டது.

ஒரு மார்பகம் இருந்த நிலையில் அவரை குடும்பத்தினர் நன்றாக பார்த்துக் கொண்டிருந்த போது, அவருக்கு மற்றொரு மார்பகத்தின் மீது ஏதோ ஒரு பாதிப்பு இருப்பதை அறிந்துள்ளார்.

இதனால் அந்த மார்பகத்தையும் அறுவை சிகிச்சை மூலம் நீக்க முடிவு செய்துள்ளார். இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 2017-ஆம் ஆண்டு அவரின் மற்றொரு மார்பகமும் நீக்கப்பட்டது. நீக்கப்பட்ட பின்பு தான் அந்த மார்பகத்திலும் புற்றுநோயின் தாக்கம் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு என்னுடைய மார்பில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை உணர்ந்தேன். இதனால் அதை நீக்க முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் மருத்துவர்கள் மீண்டும் மார்பகங்கள் வைப்பது பற்றி கூறிய போது, இவர் அது எல்லாம் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார்.

தற்போது இரண்டு மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியதால், புற்றுநோய் பாதிப்பு இல்லாமல் இருக்கிறார். அவர் கணவருடன் மேல் ஆடை இல்லாமல் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்