முகத்தை பார்க்க பிடிக்காமல் வெறுத்த குடும்பம்: வீட்டை விட்டு வெளியேறி இளம்பெண் செய்த காரியம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடைய முகம் அகோரமாக இருந்ததால் சொந்த குடும்பமே தன்னை பார்க்க வெறுத்ததாக வேதனை தெரிவித்துள்ளார்.

தேசிய சுகாதார சேவை மையத்தின் அறிக்கையின் படி, உலகில் 11 முதல் 30 வயதுவரை உள்ளவர்கள் முகப்பருக்களால் பாதிக்கப்படுவார்கள்.

அதிலும் 20 வயதில் உள்ளவர்கள் தான் அதிக துன்பத்திற்கு ஆளாவார்கள்.

அந்த வரிசையில் பிரித்தானியாவை சேர்ந்த ஆலிஸ் மூர் என்ற 21 வயது இளம்பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தன்னுடைய 16 வயது பள்ளி பருவத்தின்போது, அதிமுகமான முகப்பருக்களால் அவஸ்தையடைந்துள்ளார். இது தொடர்ந்து அதிகரித்து வந்ததால், முகம் முழுவதும் ரத்தக்கறை படிந்தது போல அகோரமாக மாறியிருக்கிறது.

கல்லூரி சென்ற பின்பு அழகுக்கலை துறையை எடுத்து படிக்க ஆரம்பித்த ஆலிஸ், தன்னுடைய முகப்பருவை போக்குவதற்கான வழியையும் தேட ஆரம்பித்துள்ளார்.

தினமும் ஒரு மருந்தை தேர்வு செய்து அதனை முகத்தில் தேய்த்தும் பார்த்துள்ளார். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

கல்லூரியில் பல கேலிகளுக்கு மத்தியில் படிப்பை முடித்து சொந்தமாக ஒரு ஒப்பனை கடையினை திறந்தார். அங்கு பருக்களுடன் வரும் பலருக்கும் அறிவுரை கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் அனைவரும், "உன்முகத்தை முதலில் சரிசெய். பின்னர் வந்து எனக்கு அறிவுரை கூறலாம்" என்பதை போல பார்ப்பார்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் வீட்டில் இருந்த சொந்த குடும்பத்தார் ஆலிஸ் முகத்தை பார்க்க பிடிக்காமல் வெறுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஆலிஸ், வீட்டிலிருந்து வெளியேறி முகப்பருவை போக்குவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். £25 பவுண்ட்ஸ்க்கு புதிய தோல் சிகிச்சை மருந்து ஒன்றினை வாங்கி தினம்தோறும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.

அதோடு நில்லாமல், தனது உணவை சீராக்கி, கார்போஹைட்ரேட்டுகள் உள்ள உணவுகளை குறைத்து, ஒரு 'தூய்மையான உணவு' திட்டத்தைத் ஆரம்பித்தார். முக்கியமாக தாவர அடிப்படையிலான உணவுகளை அதிகம் உட்கொள்ள ஆரம்பித்துள்ளார்.

இதன் விளைவாக தற்போது பொலிவான முகத்தினை பெற்றுள்ள ஆலிஸ், தைரியமாக தன்னுடைய முகத்தை வெளியுலகுக்கு காட்ட ஆரம்பித்துள்ளார். தினம்தோறும் ஒரு புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

மேலும், பலருக்கும் முகப்பரு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறார். முகப்பரு சுத்தமாக இல்லாமல் இருப்பதால் தான் வருகிறது என பலரும் அருவருப்பாக பார்ப்பார்கள். நம்மை நெருங்கவே யோசிப்பார்கள்.

ஆனால் அந்த காரணத்தால் தான் முகப்பரு வரும் என நினைப்பது தவறு. நான் தினமும் தான் முகத்தை கழுவினேன். அப்படி இருந்தும் எனக்கு இருந்தது என தான் பட்ட துன்பங்கள் குறித்து மனம்திறந்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...