பிரித்தானிய ராணுவத்தில் களமிறங்கும் ரோபோக்கள்: முடிவுக்கு வந்த ஆரம்ப கட்ட சோதனை ஓட்டம்

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானிய ராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ரோபோவின் ஆரம்ப கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.

அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் தங்கள் ராணுவத்தில் ரோபோக்களை வைத்துள்ளன. இந்த வகையில் பிரித்தானியாவும் ரோபோவை ராணுவத்தில் களமிறக்க நினைத்தது.

அதன்படி, போர் மற்றும் தீவிரவாதத் தாக்குதலில் இருந்து மனித உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், ரோபோவை வைத்து போரிடும் முறையை செயல்படுத்தி வருகிறது.

இதற்காக, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் ஒன்றரை டன் எடையுடன் கூடைய டாங் அமைப்பிலான ரோபோ பயன்படுத்தப்பட்டது. சாதாரணமாக ஒன்றரை அடி உயரம் கொண்ட இந்த ரோபோவை, தேவைக்கு ஏற்ப 7 அடி உயரம் வரை அதன் தொலைநோக்கியை உயர்த்திக் கொள்ளலாம்.

கணினி உதவியுடன் இந்த ரோபோவை ஜாய்ஸ்டிக் மூலம் இயக்க முடியும். இந்த ரோபோவில் இயந்திர துப்பாக்கி, சிறிய வகை ராக்கெட், குண்டுகள் போன்றவற்றையும் பொருத்த முடியும்.

எனவே இந்த ரோபோவைக் கொண்டு எதிரிகளின் நடமாட்டத்தையும், தாக்குதலையும் ஒரே நேரத்தில் நடத்த முடியும். ஓட்டுநர் இல்லாத கவச பீரங்கி வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers