தனியார் ரேடியோ நிறுவனத்தில் வேலை செய்துவந்த பிரித்தானிய தொகுப்பாளர் மனஅழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தின் ஷ்ரூஸ்பெரி பகுதியை சேர்ந்தவர் 41 வயதான விக்கி ஆர்ச்சர். கணவன் குழந்தைகளை விட்டு பிரிந்து தன்னுடைய மாற்றான் தந்தையுடன் வசித்து வரும் விக்கி, தனியார் ரேடியோ நிறுவனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த ஆகஸ்டு 6ம் தேதியன்று, நிகழ்ச்சியின் பாதியிலே தனக்கு சிறிது ஓய்வு தேவைப்படுவதாக கூறிவிட்டு கிளம்பியுள்ளார்.
அடுத்த 3 மணிநேரம் கழித்து அவருடைய தந்தை அறையின் கதவை தட்டி பார்த்துள்ளார். ஆனால் எந்த பதிலும் கிடைக்காததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அங்கு விக்கி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது வழக்கினை கேட்டறிந்த நீதிபதி, விக்கி மனஅழுத்தத்தின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறி வழக்கினை முடித்து வைத்தார்.