£10-ஐ செலவு செய்து £1மில்லியன் அளவுக்கு சம்பாதித்து அசத்தும் பெண்: வெளியான ஆச்சரிய பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் அழகு சாதன பொருட்களை ஓன்லைன் மூலம் விற்பனை செய்த திறமையான உழைப்பின் காரணமாக £1மில்லியன் சம்பாதிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

கேட் ஸ்பென்சர் (46) என்ற பெண் தனது கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் அவரை பிரிந்தார்.

இதையடுத்து தனது மகன்களான எத்தன் (21), ஹரிசன் (18) மற்றும் லுக் (16) உடன் அவர் வசித்து வந்தார்.

மூன்று பிள்ளைகளுக்கான கல்வி செலவுகள் மற்றும் இதர செலவுகளை சமாளிக்க கேட் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.

இந்நிலையில் The Body Shop என்ற அழகுசாதன நிறுவனத்தின் விளம்பரத்தை கேட் ஓன்லைனில் பார்த்தார்.

இதையடுத்து அழகு சாதனங்கள் மீது ஆர்வம் கொண்ட கேட், தன்னிடம் இருந்த £10 பணத்தை வைத்து சில அழகு சாதன பொருட்களை வாங்கினார்.

பின்னர் அதை ஓன்லைனில் விற்றத்தில் அவருக்கு சிறிய லாபம் கிடைத்தது.

இதையடுத்து தொழிலில் நெளிவு சுளிவுகளை கேட் விரைவில் கற்று கொண்டார்.

லாபமாக கிடைத்த பணத்தை வைத்து மீண்டும் அதிகளவில் அழகுசாதன பொருட்களை வாங்கிய கேட்டுக்கு விரைவில் லாபம் அதிகரிக்க தொடங்கியது.

இதையடுத்து தற்போது £1மில்லியன் சம்பாதிக்கும் அளவுக்கு கேட் அபாரா முன்னேற்றம் அடைந்துள்ளார்.

இதன் காரணமாக அவரின் நிதி நெருக்கடி பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளன.

இது குறித்து கேட் கூறுகையில், The Body Shop-ன் விளம்பரம் தான் என் வாழ்க்கையையே மாற்றியது.

நிறுவனத்தில் சேர்ந்த சில மாதங்களிலேயே எனக்கு பகுதி மேலாளர் பதவி கிடைத்தது.

தற்போது மைக்கேல் என்பவரை நான் காதலித்து வருகிறேன். இருவரும் 2020-ல் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers