கார் ஓட்டும்போது மயங்கிச் சரிந்த தாய்: காப்பாற்றிய குட்டி ஹீரோ

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய நெடுஞ்சாலை ஒன்றில் மணிக்கு 60 மைல் வேகத்தில் பயணிக்கும்போது, திடீரென காரை ஓட்டிய தாய் மயங்கிச் சரிய, அருகில் அமர்ந்திருந்த அவரது மகன் தனது சமயோகித புத்தியால் தன் தாய் உயிரைக் காத்ததோடு தன்னையும் காத்துக் கொண்டுள்ளான்.

பிரித்தானியாவின் Essexஇலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் வேகமாக காரைச் செலுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென மயங்கிச் சரிந்திருக்கிறார் Lauren Smith (27).

கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் நிறுத்தப்பட்டிருந்த தடுப்புகளின் மீது மோதிக் கொண்டே செல்ல, சட்டென்று காரின் ஸ்டியரிங்கைப் பிடித்து காரை நெடுஞ்சாலையிலிருந்து கவனமாக வெளியே கொண்டு வந்து புல் தரை ஒன்றில் நிறுத்தியிருக்கிறான் எட்டே வயதான அவரது மகன் Ben Hedger.

கார் கட்டுப்பாட்டை இழந்து செல்வதைக் கவனித்த பிற வாகன ஓட்டிகள், உதவிக்கு ஓடி வர, அப்போது அவசர உதவிக்காக போன் செய்ய முயன்று கொண்டிருந்த சிறுவனைக் கண்டு ஆச்சரியமடைந்திருக்கிறார்கள்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Laurenக்கு வைரஸ் தொற்றினால் மயக்கம் ஏற்பட்டதாக கண்டுபிடித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

வீடு திரும்பிய Lauren, தனது மகனிடம் மீண்டும் மீண்டும் அவன் தன் உயிரைக் காத்ததற்காக நன்றி கூறிக்கொண்டிருக்கிறார்.

அவன் செய்தது எவ்வளவு பெரிய செயல் என்று அவனுக்கு உணர்த்துவதற்காகவே அவன் செய்ததை சொல்லி பாராட்டிக் கொண்டிருக்கிறேன் என்று கூறும் Lauren, என் மகன் ஒரு குட்டி ஹீரோ என்று கூறி அவனை அணைத்துக் கொள்கிறார்.

தனது சமயோகித புத்தியால் காரை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வரும்போது, எச்சரிக்கை விளக்குகளையும் எரிய விட்டபடியே சென்றிருக்கிறான் Ben என்பதை சொல்லியே ஆகவேண்டும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers