15 வயதில் ஒவ்வொரு நாளும் கணவனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பிரித்தானியா அழகி! இன்று எப்படி இருக்கிறார்?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் அழகி பட்டம் வென்ற பெண், 15 வயதில் நான் கட்டாய திருமணத்திற்கு வற்புறுத்தப்பட்டேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் Birmingham பகுதியில் வாழ்ந்து வருபவர் Rubie Marie(35) வயதான இவர், கடந்த 2016-ஆம் ஆண்டு பிரித்தானியாவின் Ms Galaxy என்ற அழகி பட்டத்தையும், அதன் பின் 2017-ஆம் ஆண்டு சர்வதேச அளவில் Ms Galaxy என்ற அழகி பட்டத்தையும் வென்றவர்.

இந்நிலையில் இவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தான் 15 வயதில் திருமணம் செய்ய கட்டாயமாக்கப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கூறுகையில், நான் என் குடும்பத்தினருடன் விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்காக 6 வார சுற்றுப்பயணமாக வங்கதேசம் சென்றிருந்தேன்.

6 வாரம் என்பது 6 மாத காலமாக மாறிவிட்டது. அந்த சுற்றுப்பயணத்தின் போது ஒரு நாள் என் குடும்பத்தினருடன் சேர்ந்து டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

அப்போது என் அருகில் வந்த தந்தை, நீ திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று கூறினார். இதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனேன்.

எனக்கு வயது 15 தான் ஆகிறது, என்று கண்ணீர் விட்டுக் கொண்டே சென்றேன். நான் என்ன பண்ணுவது என்று தெரியாமல் இருந்தேன்.

நான் திருமணம் செய்யப் போகும் நபர் என்னை விட இரண்டு மடங்கு அதிக வயது அதிக கொண்டவராக இருந்தார். திருமணத்திற்கு வற்புறுத்தப்பட்டேன்.

திருமண நாளின் போது ஒரு பொம்மை போன்று நகை அணிந்து அங்கிருக்கும் விருந்தினர்கள் முன்பு நின்றேன்.

அதன் பின் என்னுடைய கணவர் நான் கர்ப்பமாக வேண்டும் என்று விரும்பினார். இதனால் ஒவ்வொரு நாளும் இரவும் கற்பழிக்கப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

கர்ப்பமாகிவிடக் கூடாது என்பதற்காக அவர் கருத்தடை மாத்திரைகளை எல்லாம் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதை கணவனின் குடும்பத்தார் தெரிந்து கொண்டதால், அதையும் தடுத்துள்ளனர்.

அதன் பின் கர்ப்பமான இவர் குழந்தை பிறக்கும் மூன்று வாரங்களுக்கு முன்பே குழந்தை பெற்றெடுத்ததால், அந்த குழந்தை ஊனமாக பிறந்துள்ளது.

அதுமட்டுமின்றி அவருக்கு வைரஸ் தாக்குதல் பாதிப்பு இருந்ததால், அது அப்படியே குழந்தைக்கு பரவியுள்ளது.

இதுவும் ஊனமாக பிறப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. குழந்தை பெற்ற பின்னர் இவர் அங்கிருந்து பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதிக்கு தப்பிவந்துவிட்டதாக கூறியுள்ளார்.

தற்போது Rubie Marie ஒரு தூதுவராகவும், கட்டாய திருமணம் பற்றி மக்களுக்கு அறிவுரையும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers