11 வயதாக இருக்கும்போதே புரட்சி செய்த இந்த பிரித்தானிய பிரபலத்தை அடையாளம் காண முடிகிறதா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

11 வயது சிறுமியாக இருக்கும்போதே தொலைக்காட்சி ஒன்றில் வெளியான விளம்பரம் ஒன்றிற்கு எதிராக குரல் கொடுத்து, அதை மாற்ற வைத்த அந்த பிரபலம், தற்போது உலகின் கவனத்தையே தன் பக்கம் ஈர்த்திருக்கும் பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவியான மேகன்தான்.

அவர் செய்த புரட்சி?

பள்ளி புராஜக்ட் ஒன்றிற்காக சில விளம்பரங்களை இளம் மேகனும் அவரது வகுப்பு தோழர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட டிஷ் வாஷ் விளம்பரம் அவரது கவனத்தை ஈர்த்தது.

’அதில் பாத்திரங்களைக் கழுவ போராடும் அம்மாக்கள்’ என்று கூறும் ஒரு வாசகம், சரியாக இல்லை என்று தனக்கு தோன்றவே, மேகன், உடனடியாக அந்த விளம்பரத்தை உருவாக்கிய பிரபல நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்.

மூன்றில் ஒரு விளம்பரம் யாரையாவது காயப்படுத்துவதாகவே இருக்கிறது என்று கூறியுள்ள மேகன், அந்த நிறுவனத்திடம், அம்மாக்கள் என்று கூறுவதற்கு பதில், மக்கள் என்று போடுங்கள் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதே நேரத்தில் தனது சக மாணவர்களுக்கு செய்தி ஒன்றைக் கூறிய மேகன், நீங்கள் தொலைக்காட்சியிலோ அல்லது வேறெங்குமோ பார்க்கும் ஒரு நிகழ்ச்சி, உங்களை காயப்படுத்தும் என்றால், அது குறித்து சரியான நபருக்கு கடிதம் எழுதுங்கள், நிச்சயம் மாற்றத்தைக் காண்பீர்கள் என்றார்.


கடிதம் கண்ட அந்த பிரபல நிறுவனமும் மேகனின் கோரிக்கையை ஏற்று அந்த விளம்பரத்தில் இடம்பெற்ற அம்மாக்கள் என்ற வார்த்தையை மக்கள் என்று மாற்றியது. மேகன் இளம் வயதில் பெற்ற அந்த வெற்றி பலராலும் பாராட்டப்பட்டது.

பல ஆண்டுகளுக்குப்பின் மேகன் தனது உரை ஒன்றில் அந்த நிகழ்வை நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers