நடுக்கடலில் தோன்றிய விசித்திர ஒளி! ஆச்சர்ய நிகழ்வு

Report Print Jayapradha in பிரித்தானியா

இங்லாந்து ஜிப்ரால்டர் கடற்பகுதியில் டால்பின்கள் நீலநிற ஒளியை உமிழ்ந்து விளையாடி அரிய காட்சி நடந்துள்ளது.

ஜிப்ரால்டரில் இருந்து 120 நாட்டிகல் மைல் தொலைவில் நடந்த இச்சம்பவத்தை படகில் சென்றவர்கள் படம்பிடித்துள்ளனர்.

டால்பின்களிடம் இருந்து வந்த இந்த ஒளி, சுமார் அரைமணிநேரம் இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

மாலத்தீவுகளின் கடல்களில் தண்ணீர் கலங்கும்போது ஒரு வித நீல ஒளி ஏற்படும். இந்த ஒளிக்கு உயிர் பொருள்கள் வெளியேற்றும் ஒளி (bioluminescence) என்று பெயர்.

பிளூரெஸ்ஸ்ண்ட் ப்ளங்க்டோன் என்ற கடல் உயிரி அதிகளவில் காணப்படுவதுதான் இதற்கு காரணம். கடல் அலைகளாலும் நீரை கலக்குவதாலும் இந்த உயிரிக்கு தொந்தரவு ஏற்படுவதால் நீல நிறமாக மாறும், இதன்போது டால்பின்கள் நீந்திச் செல்வதால் இப்படியான விசித்திர சம்பவம் நிகழ்வதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்