லண்டனில் இருக்கும் பிரபல தொழிலதிபர் நாடுகடப்படுவாரா? நாளை நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Report Print Santhan in பிரித்தானியா

வங்கி நிதி மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் விஜய்மல்லையா நாடு கடத்துவது குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகவுள்ளது.

வங்கிகளின் கடன் வாங்கி நிதி மோசடியில் ஈடுபட்ட விஜய்மல்லையாவை இந்தியாவுக்கு கடத்த வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் இங்கிலாந்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் விஜய்மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த லண்டன் நீதிமன்றம், நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது.

இந்நிலையில், விஜய் மல்லையா குறித்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இணை இயக்குநர் சாய் மனோகர் தலைமையிலான அதிகாரிகள், லண்டன் விரைந்துள்ளனர்.

விஜய மல்லையாவை இந்தியாவுக்கு கடத்த நீதிமன்றம் உத்தரவிடுமானால், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இக்குழு லண்டன் விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்