எச்சரிக்கையாக இருங்கள்: பேயை திருமணம் செய்து வாழ்க்கை நடத்திய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பேயை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என கூறியிருந்த பெண், ஆவிகளுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என புதிய தகவலை வெளியிடுள்ளார்.

அயர்லாந்தில் உள்ள ட்ரோகேடா பகுதியை சேர்ந்த அமண்டா ஸ்பார்ரோ லாரர்ஜ் என்ற 46 வயது பெண், இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு கடற்கொள்ளையனை திருமணம் செய்துகொண்டார்.

300 வயதான ஜாக் டீக் என்ற அந்த கடற்கொள்ளையன் 18ம் நூற்றாண்டிலே இறந்துவிட்டதாகவும், அவருடைய ஆவி தினமும் தன்னுடன் வந்து பேசுவதோடு, நெருக்கமாக பாலியல் வாழ்க்கை நடத்தி வருவதாகவும் கூறி பகீர் கிளம்பியிருந்தார்.

இவர் தனது காதலனை திருணம் செய்வதற்காக 6,000 யூரோக்களை செலவு செய்து பெயர், தங்க நிறத்திலான பற்கள் என தன்னுடைய ஒட்டுமொத்த உருவத்தையும் ஒரு கடற்கொள்ளையனை போல மாற்றிக்கொண்டார்.

மேலும், தன்னுடைய வாழ்க்கை மிகவும் அழகாக சென்றுகொண்டிருக்கிறது என கூறி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பெல்ஃபாஸ்ட்டில் வசித்து வரும் அமண்டா தற்போது ஒரு புதிய எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில், "என் திருமணம் முடிந்து விட்டது. நான் நிச்சயமாக எல்லாவற்றையும் படிப்படியாக விளக்கிக் கூறுகிறேன்.

ஆனால் இப்போது நான் சொல்ல வருவது எல்லாமே ஆன்மீகத்தன்மை கொண்ட பேயை தொடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்