ஆறு முறை கருச்சிதைவான பெண்ணுக்கு குரங்கால் நடந்த அற்புதம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஆறு முறை கருச்சிதைவான ஒரு பெண்ணின் வயிற்றை குரங்கு ஒன்று முத்தமிட்டதால் அவருக்கு நல்லபடியாக குழந்தை பிறந்த அற்புத சம்பவம் ஒன்று பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது.

பிரித்தானியப் பெண்ணான Nina Marston ஆறு முறை கருவுற்றும், ஆறு முறையும் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது.

இதனால் வருத்தத்துடன் இருந்த Nina Colchester ஏழாவது முறையாக தான் கருவுற்றபோது விலங்குக் காட்சியகத்திலுள்ள ஒராங்குட்டான் வகை குரங்கான Rajangஐச் சந்தித்தார்.

2015ஆம் ஆண்டு, Rajang, Masie Knight என்னும் பெண்ணின் மேடிட்ட வயிற்றைக் கண்டதும் அதைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியது.

அதிலிருந்து எந்த கர்ப்பிணிப்பெண் வந்தாலும், அவர்களிடம் மிகுந்த ஆர்வம் காட்டுவது Rajangஇன் வழக்கம்.

விலங்குக் காட்சியகத்திற்கு சென்ற Nina தனது சட்டையை உயர்த்தி தனது வயிற்றை Rajangஇடம் காட்டினார்.

ஆச்சரியப்படும் விதமாக அவர் அருகில் வந்த Rajang, Ninaவின் வயிற்றில் நீண்ட நேரம் முத்தமிட்டது.

பின்னர் Nina அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். நேற்று Rajang என்னும் அந்த அற்புதக் குரங்கு மரணமடையவே, அந்த சம்பவம் குறித்து நினைவுகூறும் Nina, நான் Rajangஐப் பார்ப்பதற்காக நீண்ட வரிசயில் நின்றேன்.

நான் அருகில் வந்து எனது சட்டையை உயர்த்திக் காட்டவும் Rajang என் வயிற்றில் பெரிய முத்தம் ஒன்றைப் பதித்தது, நான் அழுது விட்டேன் என்கிறார்.

Rajang அப்படி செய்யாமல் இருந்திருந்தால் நான் வாழ்க்கையே வெறுத்துப் போயிருப்பேன் என்று கூறும் Nina, நான் கர்ப்பமாக இருக்கும்போது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட விடயங்களில் அதுவும் ஒன்று என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers