6 மனைவிகள்...13 குழந்தைகள்: உண்மையை மறைத்து என்னை ஏமாற்றினார்... ஒரு தாயின் பகிர்வு

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவில் தாய் ஒருவர் தனது கணவனால் ஏமாற்றப்பட்ட கதை பிபிசியில் ஒளிபரப்பான Mrs Wilson என்ற க்ரைம் தொடருடன் சம்பந்தப்பட்டது என பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்தின் Edinburgh - இல் வசித்துவரும் Mary Turner Thomson தனது கணவனுக்கு 6 பெண்கள் மூலம் 13 குழந்தைகள் இருப்பதை கண்டறிந்ததையும், தனது கணவனால் அச்சுறுத்தப்பட்டடு தான் மறைமுக வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

எனக்கு 9 மாத குழந்தை இருக்கும்போது ஆன்லைன் மூலம் அமெரிக்காவை சேர்ந்த William Allen Jordan அறிமுகமானார்.

அவருடன் பழகிய இரண்டு வாரங்களில் என்னை திருமணம் செய்துகொள்கிறாயா என என்னிடம் கேட்டார். இதற்கு ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த நான், பின்னர் ஒத்துக்கொண்டேன்.

எங்களுக்கு திருமணமான 2 மாதத்தில் நான் கர்ப்பமானேன், ஆனால் அவர் என்னிடம் தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத குறை இருப்பதாக ஆரம்பத்தில் சொன்னார்.

ஆனால், நான் கர்ப்பம்தரித்த காரணத்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தான் ஓரு CIA (Central Intelligence Agency) என என்னிடம் கூறினார். இதனால் உன்னுடன் அதிகமாக வசிக்க இயலாது, பணி நிமித்தமாக நான் ஆங்காங்கே செல்வேன் என தெரிவித்த காரண்த்தால் நான் அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை.

எனது குழந்தை பிறந்த பிறகு தான் எனக்கு தெரியவந்தது, அவருக்கு 6 பெண்கள் மூலம் 13 பிள்ளைகள் இருப்பதும், இவ்வாறு பொய்களை சொல்லி அவர் பெண்களை ஏமாற்றியதும்.

இந்த உண்மை எனக்கு தெரிந்துவிட்ட காரணத்தால் எனது மகனை கொலை செய்ய பார்த்தார், இதனால் நான் எனது மகனுடன் மறைந்து வாழ்ந்தேன்.

பெண்களை ஏமாற்றியது, திருடியது, ஏமாற்றுவேலை போன்ற குற்றங்களுக்காக William Allen Jordan க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்