10 வருடங்களாக தந்தையின் அஸ்தியை சுமந்து திரிந்த மகள்! கடைசியில் எடுத்த முடிவு

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் தந்தை தற்கொலை செய்து கொண்ட அதே இடத்தில் மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Derbys நகரை சேர்ந்தவர் ஸ்டீவன். இவர் தனது மனைவி மற்றும் மகள் மியா பெல் (15) உடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் தனது வீட்டருகில் உள்ள காட்டில் ஸ்டீவன் கடந்த 2008-ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது மியாவுக்கு ஆறு வயது, தந்தை இருந்த வரை சுட்டித்தனமாக இருந்த மியா பின்னர் யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்து வந்தார்.

ஸ்டீவன் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் அந்த சாம்பலை மியாவும் அவர் குடும்பத்தாரும் வைத்திருந்தனர். அதை அடிக்கடி மியா பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஸ்டீவன் தற்கொலை செய்து கொண்ட இடத்துக்கு அடிக்கடி சென்று தந்தைக்கு பிடித்த மதுவகைகள், பூக்களை அங்கு வைத்து வருவதை சிறுமி மியா வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்டீவன் தற்கொலை செய்து கொண்ட இடத்துக்கு சென்ற மியா தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மியா உயிரிழந்ததற்கான காரணம் சரியாக தெரியாத நிலையில், தான் விரும்பி தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.

இது குறித்து மியாவின் குடும்ப மருத்துவர் கூறுகையில், மியா தன்னை தானே பலமுறை காயப்படுத்தி கொண்டிருக்கிறார்.

அவருக்கு யாரோ பேசுவது போல அடிக்கடி கேட்பதாக கூறியுள்ளார்.

இதற்காக கவுன்சிலிங்கும் கொடுத்து வந்தோம். மியாவின் தந்தை இறந்தபின்னர் தாய் கெல்லி இரண்டாம் திருமணம் செய்தார்.

ஆனால் இதை மியாவால் ஏற்று கொள்ள முடியவில்லை. தந்தையின் இறப்பு அவளை பெரியதும் வாட்டியது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்