மேகன் செய்தால் விதி மீறல், கேட் செய்தால் ஆச்சரியமா: அப்படி என்ன செய்தார்கள் இருவரும்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

சில மாதங்களுக்குமுன் பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் செய்த ஒரு செயலை விதி மீறல் என வர்ணித்த பத்திரிகைகள், அதே காரியத்தை இளவரசர் வில்லியமுடைய மனைவி கேட் செய்யும்போது மட்டும் ஆச்சரியமாகப் பார்க்கின்றன.

அப்படி என்ன செய்துவிட்டார் கேட்?

அடர் வண்ணத்தில் நகப்பூச்சும், செல்பிக்களுமாக ராஜ விதிகளை மீறிவிட்டார் மேகன் என பத்திரிகைகள் விமர்சனம் செய்திருந்த நேரத்தில், சென்ற வாரத்தில் கேட் செய்த ஒரு காரியம் தலைப்புச் செய்தியானது.

பக்கிங்காம் அரண்மனைக்கு தானே தனது காரை ஓட்டிக் கொண்டு வந்த கேட், மக்களை ஆச்சரியப்படுத்தும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.

அதில் காரிலிருந்து இறங்கும் கேட், தானே தனது காரின் கதவை மூடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

சமீப காலமாக பல சர்ச்சைக்குரிய செய்திகள் அவரைக் குறித்து வெளியான நிலையில், மிகவும் மகிழ்ச்சியுடன் காரிலிருந்து இறங்கின கேட், தனது காரின் கதவை தானே மூடியபின் தனது ரசிகர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.

செப்டம்பர் மாதம் இதேபோல் மேகன் தனது காரின் கதவை அடைக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.

ராஜ மரபின்படி, மற்றவர்கள்தான் ராஜ குடும்பத்தினர் வரும் வாகனங்களின் கதவை திறந்து அவர்களை வெளியே விடுவதோடு, கதவை மூடவும் வேண்டும்.

அன்று மேகன் செய்த அந்த செயல் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் கேட்டை மட்டும் எல்லாரும் மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் பார்க்கிறார்கள்.

கேட் இப்படி செய்வது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்