லண்டனில் உணவுகளை அமெசானில் ஆர்டர் செய்த விசித்திர கிளி! ஆச்சரிய சம்பவத்தை விளக்கிய உரிமையாளர்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் கிளி ஒன்று அமேசானில் பல்வேறு உணவுப் பொருட்களை ஆர்டர் செய்துள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் தேசிய விலங்குள் நல அறக்கட்டளையில் ஊழியராகப் பணியாற்றி வருபவர் மேரியன் விஸ்ஜிவஸ்கி.

இவர் அங்கிருந்த ரோக்கோ என்ற கிளியின் செயல்களைப் பார்த்து அதை வளர்ப்பதற்கு முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து தன் வீட்டில் வளர்த்து வந்த இவர் அந்த கிளி பற்றி சொன்ன தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சமயம் பணி நிமித்தம் காரணமாக மேரியன் வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த அமேசான் அலெக்சாவைப் பயன்படுத்தி ரோக்கோ, தனக்குத் தேவையான உணவுப்பொருள்களை ஆர்டர் செய்துள்ளது.

அதில் தர்பூசணி, உலர் திராட்சைப் பழங்கள், ப்ரோக்கோலி, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருள்களை ஆர்டர் செய்துள்ளது.

இந்த ஆர்டர் தொடர்பான அறிவிப்பு மேரியானுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக தன் கணவன் மற்றும் மகனிடம் விசாரித்தபோது அவர்கள், நாங்கள் ஏதும் ஆர்டர் செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னரே கிளி இந்த வேலையை செய்துள்ளது தெரியவந்துள்ளது. எப்போதோ ஒருமுறை அவர்கள் பேசியதை உள்வாங்கிக்கொண்ட கிளி, அவர்கள் இல்லாதபோது அதேபோல பேசி ஆர்டர் செய்துள்ளது.

அது மட்டுமின்றி அந்த வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியான பூனை போலவும் அந்த கிளி பேசுமாம்.

கிளி ஆர்டர் செய்ததை நான் ரத்து செய்துவிட்டேன். இது முதன்முறையில்லை இதுபோல் பல விசித்திரமான விளையாட்டுகளை ரோக்கோ செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்