61 வயது பெண்ணிடம் காதலை கூறிய 24 வயது யூடியூப் பிரபலம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த 24 வயதான யூடியூப் பிரபலம் தன்னைவிட 37 வயது பெரிய பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்.

சமுக வலைத்தளமான யூடியூப் மூலம் பிரபலமானவர் பிரித்தானியாவை சேர்ந்த ஜூலியா ஸெல்ஜ் (24). இவர் பிரேசில் நாட்டை பூர்விகமாக கொண்டவர்.

சமீபத்தில் தன்னுடைய யூடியூப் பக்கத்தில், அமெரிக்காவை சேர்ந்த 61 வயதான எலின் டே பிரெஸ்ட் என்கிற பெண்ணுடன் இருக்கும் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விழாவிற்கு முன்னதாக நான் எலினிடம் என்னுடைய காதலை கூறினேன். உடனே அவரும் என்னுடைய காதலை ஏற்றுக்கொண்டார். இருவரும் செப்டம்பர் மாதம் டிண்டர் ஆப் மூலம் சந்தித்து கொண்டோம்.

அதன் மூலமாக தான் எங்கள் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இதுவரை நான் சந்தித்த மனிதர்களில் இவர் மிகவும் அற்புதமான நபர் என தெரிவித்துள்ளார்.

தற்போது இருவரும் லண்டனில் ஒன்றாக வசித்து வருகின்றனர். ஜூலியா பெற்றோரின் அனுமதியுடன் இந்த மாத இறுதிக்குள் எலினை திருமணம் செய்ய உள்ளார்.

இதற்கு ஜூலியாவின் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். உங்களை விட 37 வயது பெண்ணை மணப்பதா என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்