முதல் குழந்தை மரணம்: 2வது குழந்தைக்கு பிறந்த 1 மணி நேரத்தில் 3 மாரடைப்பு! கண்ணீர் விடும் பெற்றோர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் பிறந்த 1 மணிநேரத்தில் 3 மாரடைப்புகளை சந்தித்து உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு பெற்றோர் உதவி கோரியுள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த சாரா மற்றும் கிறிஸ் தம்பதியினரின் முதல் குழந்தை கடந்த 2012ம் ஆண்டு 2 வயதில் பரிதாபமாக உயிரிழந்தது.

இதனையடுத்து 2-வது முறையாக மீண்டும் சாரா கர்ப்பமடைந்திருப்பதை கேள்விப்பட்டு உறவினர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

முதல் குழந்தை இறந்ததால், இரண்டாவது குழந்தையின் மீது அதிக கவனம் செலுத்தினர். கரு நன்கு வளர்ச்சியடைந்திருப்பதாக மருத்துவர்கள் கூறினாலும், சாராவின் கவனம் அதிகமாகவே இருந்தது.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்தினம் சராவிற்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் தம்பதியினர் உட்பட உறவினர்கள் அனைவரும் பெரும் கவலையில் உள்ளனர். தற்போது பல்வேறு மருத்துவ கருவிகளை பொருத்தி குழந்தையின் வாழ்நாளை நீட்டித்திருக்கும் மருத்துவர்கள், விரைவில் குழந்தைக்கு மாற்று இதய அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் உயிரிழந்துவிடலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையினை வெளிப்படையாக கூறியுள்ள சாரா - கிறிஸ் தம்பதியினர், தற்போது தங்களுடைய குழந்தைக்கான மாற்று இதயம் வேண்டி உதவி கேட்டுள்ளனர். உறவினர்களும் இதனை தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உதவி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்