மில்லியனார் போட்டியில் நொடியில் £ 250,000 பவுண்டுகளை தவறவிட்ட நபர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

மில்லியனார் ஆக யார் விரும்புகிறீர்கள் என்ற பிரபலமான நிகழ்ச்சியில் பொதுமக்கள் கொடுத்த தவறான பதிலால், £ 250,000 பவுண்டுகளை வெல்ல வேண்டிய நபர் அதனை தவற விட்டுள்ளார்.

பிரித்தானியாவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான மில்லியனார் ஆக யார் விரும்புகிறீர்கள்? நிகழ்ச்சியில் கேன்டர்பரி பகுதியை சேர்ந்த ஒளி என்பவர் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் £125,000 பவுண்டுகளை வென்றிருந்த போது, புத்தகம் குறித்த ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு சரியான பதிலளித்தால், £ 250,000 பவுண்டுகளை வெல்லலாம் எனவும், தவறான பதிலளித்தால் ஏற்கனவே வைத்துள்ள தொகையிலிருந்து £93,000 பவுண்டுகளை இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டது.

போட்டிக்கு ஆயத்தமான ஒளி, கீழேகொடுக்கப்பட்டிருந்த புத்தகங்களில் எதையுமே படித்திருக்காததால் பெரும் குழப்பத்திற்கு ஆளானார்.

உடனே விடைகளில் பாதிக்குப்பாதி வாய்ப்பினை பயன்படுத்தினார். அதன்படி தவறான இரண்டு பதில்கள் நீக்கப்பட்டு Tinker Tailor Soldier Spy, Dracula என்ற இரண்டு பதில்கள் மட்டும் இருந்தன.

அப்பொழுதும் கூட அவரால் கணிக்க முடியாததால் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் வாய்ப்பை பெற்றார். அதில், 80 சதவீத மக்கள் Tinker Tailor Soldier Spy என பதில் தெரிவித்ததால் அதையே அவரும் தேர்ந்தெடுத்தார்.

ஆனால் அதன் உண்மையான பதில் Dracula என முடிந்ததால் ஒளி நிகழ்ச்சியின் போதே சோகத்தில் மூழ்கினார்.

இறுதியில் £32,000 பவுண்டுகளுடன் போட்டியில் இருந்து விடைபெற்றார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers