சீனாவிலிருந்து பிரித்தானியாவுக்கு பார்சலில் வந்த பாம்பு

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கெட்டில் ஆர்டர் செய்தவரின் பார்சலில் ஒரு பாம்பும் சேர்த்து பார்சல் செய்யப்பட்டிருந்ததையறிந்து அதிர்ச்சியுற்ற அவர், சமயோகிதமாக அதை சிக்க வைத்தார்.

Paddingtonஐச் சேர்ந்த Barry, கிறிஸ்துமஸ் நேரத்தில் ஒரு கெட்டில் வாங்கியிருந்தார்.

பின்னர் அவர் அந்த கெட்டில் சரியாக இயங்குகிறதா என்பதை பரிசோதிப்பதற்காக அதை பார்சலிலிருந்து வெளியே எடுத்தார்.

டீ தயாரித்து குடித்த Barry, பார்சலுக்கருகே என்னமோ கிடப்பதைக் கண்டு, அதை எடுத்து குப்பை போடும் பின்னில் போட, அது சீறியது.

அப்போதுதான் அது ஒரு பாம்பு என்பதை உணர்ந்த Barry, உடனடியாக அதை ஒரு கண்ணாடி மூடித் தட்டால் மூடிவிட்டு, விலங்குகள் நல அமைப்பிற்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த விலங்குகள் நல அமைப்பினர் அந்த பாம்பை பிடித்தனர்.

அவர்களிடம் தனக்கு கண் பார்வைக் குறைபாடு இருப்பதால், அதை பாம்பு என்று தெரியாமலே கையில் எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டதை விவரித்தார் Barry.

தான் வாங்கிய அந்த கெட்டில் சீனாவில் தயாரிக்கப்பட்டதால் அந்த பாம்பு சீனாவிலிருந்து வந்திருக்கலாம் என்று Barry எண்ண, விலங்குகள் நல அமைப்பினரோ அது பிரித்தானியாவில் கெட்டில் பார்சல் செய்யப்படும்போது தவறுதலாக பார்சலுக்குள் சிக்கியிருக்கலாம் என்கின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்