தூக்கத்தில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பிரித்தானிய கிரிக்கெட் வீரர்: வாட்ஸ் ஆப் அதிர்ச்சிப் பின்னணி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

வாட்ஸ் ஆப்பில் குழு ஒன்றை தொடங்கி தாங்கள் பாலுறவு கொள்ளும் பெண்கள் குறித்து மதிப்பெண் இடும் விளையாட்டின் ஒரு பகுதியாக, தூங்கும் இளம்பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரித்தானிய கிரிக்கெட் வீரர் ஒருவர் சிக்கியபின், இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Alex Hepburn பிரித்தானியாவின் Worcestershire County Cricket Club சார்பில் விளையாடும் ஆல் ரவுண்டர்.

ஒரு நாள் குடிப்பதற்காக வெளியே சென்ற Alex, அறைக்கு திரும்பியபோது அங்கு ஒரு பெண் படுக்கையில் இருப்பதைக் கண்டிருக்கிறார்.

அவரை Alex பாலியல் வன்புணர்வு செய்ததும் தூங்கிக் கொண்டிருந்த அந்த பெண் எழுந்து அவரைத் தள்ளி விட்டு விட்டு Joe Clarke எங்கே என்று கத்திக் கொண்டே வெளியே ஓடியிருக்கிறார்.

நடந்தது இதுதான், அந்த பெண் Alexஇன் அறை தோழரான Joe Clarkeஉடன் வந்த பெண். Joeவும் அந்த பெண்ணும் சற்று முன்னர்தான் படுக்கையை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

பின்னர் மது அருந்தியதால் வாந்தி வரவே எழுந்து பாத்ரூமுக்கு சென்றிருக்கிறார் Joe. அந்த நேரத்தில்தான் Alex தூங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணை வன்புணர்வு செய்திருக்கிறார்.

கைது செய்யப்பட்டுள்ள Alex மீதான விசாரணையில் வாட்ஸ் ஆப்பில் குழு ஒன்றை தொடங்கி தாங்கள் பாலுறவு கொள்ளும் பெண்கள் குறித்து மதிப்பெண் இடும் விளையாட்டின் ஒரு பகுதியாகவே அவர் அந்த பெண்ணை வன்புணர்வு செய்ததாக தெரிய வந்துள்ளது.

தன் மீதான் குற்றச்சாட்டை மறுத்துள்ள Alex, அந்த பெண்ணின் சம்மதத்தின் பேரிலேயே உறவு கொண்டதாக கூறியுள்ள நிலையில் விசாரணை தொடர்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers