இளவரசர் பதவியை துறக்க விரும்பிய ஹரி... தடுத்த நிறுத்திய அந்த நபர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி தன்னுடைய அரச பதவியை துறக்க விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் தம்பதியினர் விரைவில் தங்களுடைய முதல் குழந்தையை பெற்றெடுக்க உள்ளனர்.

அதோடு அரண்மனையில் இருந்து வெளியேறி ஃபிரோமோர் குடிசையில் இருவரும் குடியேற உள்ளனர்.

அவர்கள் இருவரும் தங்களுடைய குழந்தையை ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த குழந்தையை போல வளர்க்க விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஹரி தனியார் தொலைக்காட்சியில் பேசியிருக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், ஹரி தன்னுடைய அரச பதவியை துறக்க விரும்பியதாகவும், ராணுவத்தில் பணிபுரிய மறுப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், தன்னை ராணி தடுத்தி நிறுத்தி தொண்டு வேலையில் ஈடுபட தன்னை உற்சாகப்படுத்தியதன் காரணமாக தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டதாக கூறியிருக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers