50 வருடங்களாக அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் ராணி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய ராணி தனக்கு பிடித்தமான சில பொருட்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகிறார்.

92 வயதான பிரித்தானிய ராணி தனது துணிகளைத் தயாரிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சில சப்ளையர்களை வைத்துள்ளார். அவர்களில் சிலர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.

பொது பணிக்கான அவரது பணிமிகுதி அட்டவணையால் ஒரு நாளில் பல்வேறு அலங்கார மாற்றங்களை அவர் செய்து வருகிறார்.

அதிலும் கையுறைகள் மற்றும் காலணிகள் மிக உயர்ந்த தரமான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

அப்படி அவருக்கான பொருட்கள் பல தயாரிக்கப்பட்டு வந்தாலும், வெளியில் செல்லும் நேரங்களில் கையில் வைத்திருக்கும் பிரிட்டிஷ் லேபிள் Launer காப்புரிமை கொண்ட பையானது கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக அவரிடம் இருந்து வருகிறது.

1970 இல் முதன் முதலாக செக்கர்ஸில் ஜனாதிபதி நிக்சன் உடனான சந்திப்பின் போது அவரது கையில் காணப்பட்ட பை, மீண்டும் 2017 ல் கிங் டிராப் ராயல் ஹார்ஸ் பீரங்கியைப் பரிசோதித்துப் பார்க்கையில் அணிந்திருந்தார்.

இதேபோல அவருக்கு பிடித்தமான காலனி, தலைப்பாகை மற்றும் ஜாக்கெட்டுகளை தொடர்ந்து தன்னுடனே பத்திரமாக வைத்து வருகிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers