தேவதையாக வலம் வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட மாற்றம்: மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்ட பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் சாதாரண காய்ச்சல் ஏற்பட்டதாக நினைத்திருந்த இளம்பெண்ணுக்கு மூளை புற்றுநோய் ஏற்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Lancashire-ஐ சேர்ந்தவர் லவுரா நுட்டால் (19). அழகிய இளம்பெண்ணான இவர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்தார்.

கல்லூரியில் சேர்ந்த சில வாரங்களில் லவுராவுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதோடு காய்ச்சல் ஏற்பட்டது.

கல்லூரிக்கு சேர்ந்த புதிதில் பலருக்கும் பயத்தால் ஏற்படும் காய்ச்சல் என லவுராவும் அவர் தாய் நிகோலாவும் நினைத்திருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

காரணம், glioblastomas எனப்படும் வீரியமான மூளை புற்றுநோயால் லவுரி பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஆப்ரேஷன்கள் மூலம் லவுராவின் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது, ஆனாலும் மீண்டும் அவருக்கு அந்த பிரச்சனை ஏற்பட்டது.

குறித்த புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் 12 மாதங்கள் வரை மட்டுமே உயிரோடு இருக்க முடியும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

மூன்று சதவீத பேர் மட்டுமே மூன்று ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்கிறார்கள் எனவும் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

நோய் பாதிக்கப்படும் முன்னர் அழகு தேவதையாக இருந்த லவுரா, நோய்க்கு பின்னர் தலைமுடிகளை இழந்து அடையாளமே தெரியாத அளவில் மாறியுள்ளார்.

மகளின் நிலை குறித்து பேசிய தாய் நிகோலா, லவுராவின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி வருகிறேன்.

அவளுக்கு பிடித்த கால்பந்து வீரர்களை சந்திக்க ஏற்பாடு செய்தேன், எப்போது நேர்மறையான எண்ணங்களை அவள் கொண்டுள்ளார்.

லவுராவுக்கு பிடித்த விடயங்களை எல்லாம் மேற்கொள்ள என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers