பணிபுரிவதற்கு சிறந்த நாடுகளில் பிரித்தானியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? ஆய்வு

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பணிபுரிவதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் பிரித்தானியாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

தங்கள் நாட்டை விட்டு வேறு நாட்டில் சென்று பணி புரியும் 22,000 பேரிடம் HSBC வங்கி மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், பணிபுரிவதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் பிரித்தானியாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

முதலிடத்தை ஜேர்மனியும், இரண்டாவது இடத்தை பஹ்ரைனும் பிடித்துள்ளன.

அதே நேரத்தில் புதிய திறமைகளை கற்றுக் கொள்ள விரும்பும் நாடுகளில் பிரித்தானியா முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டின் பணிபுரிவதற்கு சிறந்த நாடுகள் பட்டியலை ஒப்பிடும்போது, பிரித்தானியா ஆறு இடங்கள் முன்னேறியுள்ளது.

அயல் நாட்டு பணியாளர்களில் ஐந்தில் மூன்றுபேர், தங்கள் சொந்த நாட்டில் இருப்பது போன்ற பணிச்சூழல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அயல் நாடுகளில் இருந்து வந்து பிரித்தானியாவில் பணிபுரிவோரில் பெரும்பாலோர், முறையே ரொமேனியா, பிரான்ஸ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

163 நாடுகளில் 22,318 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், எட்டு விடயங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன.

அவையாவன, புதிய திறமைகளை கற்றுக்கொள்ளும் திறன், வேலை / வாழ்க்கை சமநிலை, பணிச்சூழல், வேலையின் நிலைத்தன்மை, வேலையில் முன்னேற வாய்ப்புகள், பணியில் திருப்தி, பணியாளர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள் முதலான விடயங்கள் மற்றும் ஊதியம் ஆகியவையாகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers