மேகன் மேல் குவியும் புகார்கள்: 6 மாதத்தில் வேலையை ராஜினாமா செய்யும் உயரதிகாரி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கெலின் பெண் மெய்க்காப்பாளர், பணிக்கு சேர்ந்த 6 மாதத்திலே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரச குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு வகித்த காவல் ஆய்வாளர், 6 மாதங்கள் மட்டுமே பணியாற்றியிருந்த நிலையில் தற்போது தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று வரை அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவுஸ்திரேலிய, பிஜி, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் இருந்து இளவரசியை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தி, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

அவர் வேலையை விட்டு வெளியேறுவதற்கான சரியான காரணங்கள் வெளிவராத நிலையில், மேகனுக்கும் மெய்காப்பாளர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த பெண் மெய்க்காப்பாளர், காவல் துறையில் உயர் பதவியில் பணியாற்றியதாகவும் பேசப்படுகிறது.

மெர்க்கல் நடிகையாக இருந்தாலும், சுதந்திரமாகவே சுற்றி திரிய விருப்புகிறார். ஆனால் சமீப காலமாகவே மெய்க்காப்பாளர்களால் அவருடைய சுதந்திரம் பறிபோவதை போல் உணர்வதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக சமீபத்தில் மேகனின் தனிப்பட்ட உதவியாளரான மெலிசா டவப்ட்டி, ராயல் குடும்பத்திற்காக 17 வருடங்கள் பணிபுரிந்த ராணியின் தனிச்செயலாளர் சமந்த கோஹன் ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்