பச்சிளங்குழந்தையை உயிருடன் பலி கொடுத்த தாய்: பழி வாங்கத் துடிக்கும் சித்தி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

குடும்பத்தின் செல்லப்பிள்ளையான ஒரு சுட்டிக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொல்ல முயன்று, பின் உயிருடன் எரித்துக் கொன்ற தனது அக்காவை சிறைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அந்த குழந்தையின் சித்தி.

Carly Ann Harris (38), தனது நான்கு வயது அழகிய பெண் குழந்தையான Ameliaவை தண்ணீரில் மூழ்கடித்தார்.

பின்னர் அவள் அரை குறை உயிருடன் இருக்கும்போதே, பிரித்தானியாவில் இருக்கும் தனது வீட்டின் பின்னாலுள்ள தோட்டத்தில் ஒரு மேசையில் கிடத்தி தீவைத்துக் கொளுத்தி பலியிட்டார் Carly.

Ameliaவின் அண்ணனான Levi (17) மேசையில் கரிக்கட்டையாக கிடக்கும் தங்கையைப் பார்த்து அலறியிருக்கிறார்.

கூக்குரல் கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டுக்காரப்பெண் ஒருவர், எரிந்த நிலையில் கிடக்கும் Ameliaவையும், பயந்து நடுங்கிப்போயிருக்கும் அவளது அண்ணனையும் கண்டு, உடனடியாக பொலிசாரை அழைத்திருக்கிறார்.

அதற்குள் தனது தங்கைக்கு போன் செய்த Carly, என் மகளைக் கொன்றுவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

பொலிசார் வந்து Carlyயைக் கைது செய்தாலும், இள வயது முதலே அவர் மன நலப்பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவரை மன நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் Ameliaவை மிகவும் நேசித்த Carlyயின் தங்கையான Tiffany Wright (30)ம் அவரது கணவரான Mathew (31)ம், தனது மகளை கொலை செய்து விட்டு, ஆயுள் தண்டனை பெற்றிருக்க வேண்டிய Carly, மன நோயாளி என்ற பெயரில் சுதந்திரமாக நடமாடுவதைக் கண்டு கோபமுற்று, அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று புகாரளிப்பதற்காக ஆதரவு திரட்டி கையெழுத்துக்கள் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

வாழ வேண்டிய குழந்தை மண்ணுக்குள் புதையுண்டு கிடக்க, கொலைகாரியான Carly மட்டும் சுதந்திரமாக நடமாடக்கூடாது என்று கூறும் Tiffany, அதற்கு ஆதரவாக 4000 கையெழுத்துக்கள் பெற்றுள்ளதோடு, அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள Ameliaவின் சகோதரர்களுக்கும் ஆதரவு தேவை என்று கோரியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்