பிரித்தானியாவில் மாதவிடாய் கறையுடன் அவஸ்தைப்பட்ட மாணவி!

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் பாடசாலை மாணவி ஒருவர் மாதவிடாய் கறையுடன் நாள் முழுவதும் அவஸ்தைக்கு உள்ளான சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாணவி பாடசாலை சீருடையில் ரத்தக்கறையுடன் வீடு திரும்பியதை காண நேர்ந்த அவரது தாயார் அதிர்ச்சிக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியில் அமைந்துள்ள Cotham பாடசாலையிலேயே 11 வயது மாணவிக்கு அங்குள்ள நிர்வாகத்தினரால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவியின் பெயரை வெளிப்படுத்தாத அந்த பெற்றோர், தங்களது மகள் இனிமேலும் அந்த பாடசாலைக்கு செல்ல தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

மாதவிடாய் காலத்தில் மாணவி ஒருவரின் அடிப்படை தேவையை நிறைவேற்ற கழிவறைக்கு அனுப்பாமல் அவரை குற்றவுணர்வுக்கு தள்ளிய அந்த பாடசாலை நிர்வாகம் உரிய பதில் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

தற்போது தங்களது மகள் பாட்சாலைக்கு செல்ல அஞ்சுவதாகவும், ஒருமுறை கூட அந்த அவஸ்தைக்கு உள்ளாக தங்களது மகள் தயாரில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக குறித்த பாடசாலை நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்ததன் பேரில் தற்போது அந்த மாணவிக்கு கழிவறைக்கு செல்லும் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன் முறையாக குறித்த மாணவி தமது மாதவிடாய் நேரத்தில் கழிவறை செல்ல அனுமதி கோரியுள்ளார்.

ஆனால் அதற்கு ஆசிரியை மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை குறித்த மாணவியின் பெற்றோர் பாடசாலை நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அக்டோபர் மாதமும் குறித்த மாணவியை அவரது மாதவிடாய் நேரத்தில் கழிவறை செல்ல ஆண் ஆசிரியர் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதன் பின்னரே குறித்த மாணவியின் பெற்றோர் இந்த விவகாரம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உறுதியான நடவடிக்கைக்கு கோரியுள்ளனர்.

தற்போது மாணவிகளின் அதுபோன்ற காலகட்டத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக Cotham பாடசாலை நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்