பிரித்தானிய இளவரசர் ஹரியின் குழந்தை குறித்து ராசி பலன் கூறுவது என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் தங்கள் முதல் குழந்தையை எதிர்நோக்கியிருக்கும் நேரத்தில், பிரபல ஜோதிடர் ஒருவர், ராஜ குடும்பத்தின் புது வாரிசு எப்படி இருக்கும் என கணித்துள்ளார்.

பிரபல ஜோதிடரான OSCAR CAINER என்பவர் ஹரிக்கு பிறக்கவிருக்கும் குழந்தை, ரிஷப ராசியுடன் ராகு இணையும் ஒரு புது தலைமுறையின் முதல் குழந்தைகளில் ஒன்றாக இருக்கும் என்கிறார்.

பொதுவாக ரிஷப ராசிக்காரர்கள், தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பவர்களாக இருப்பதோடு தங்களுக்கு தெரியாத விடயங்களில் தலையிடவும் மாட்டார்கள்.

எனவே யாருக்கும் அடங்காத குணத்தைக் குறிக்கும் ராசியைக் கொண்ட, பிறக்கவிருக்கும் அந்த குழந்தை, சுய முடிவெடுக்ககூடியதாக, சுதந்திர மனப்போக்கு உடையதாக இருக்குமாம்.

அந்த குழந்தை எதையும் செய்ய முடியும் என்ற நேர்மறை எண்ணம் கொண்டதாகவும், சாகஸம் செய்ய வேண்டும் என்ற ஆர்வமுடையதாகவும் இருக்கும் என்கிறார் OSCAR CAINER.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்