பூட்டிய வீட்டினுள் மர்மமாக இறந்து கிடந்த பிரித்தானிய இளம்தம்பதி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவின் கிளாஸ்கோ பகுதியில் நேற்று பூட்டிய வீட்டினுள் இரண்டு இளம்தம்பதிகள் மர்மமாக இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தின் Thornliebank பகுதியில் வசித்து வருபவர்கள் 23 வயதான டெரெக் ஹூர்லஸ் மற்றும் நிகோல் மெக்கெயின் என்கிற தம்பதியினர்.

டெரெக் கட்டுமான வேலை பார்த்து வருகிறார். தம்பதியினர் இருவரும் நேற்று காலை 10 மணியளவில் பூட்டிய வீட்டினுள் மர்மமாக இறந்து கிடந்துள்ளனர்.

ஆனால் அவர்கள் வளர்த்த இரண்டு நாய்களும் உயிருடன் வீட்டில் இருந்தன.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தம்பதியினரின் இறப்பு விவரிக்க முடியாத வகையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், வாயு அல்லது கார்பன் மோனாக்சைடு கசிவால் இறந்திருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர், கடந்த 3 நாட்களாகவே தம்பதியினரை வீட்டிற்கு வெளியில் பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்