காதலியை நிர்வாணமாக வீட்டை விட்டு விரட்டிய காதலன்: பொலிசாரின் அலட்சியத்தால் பலியான உயிர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அலட்சியமாக இருந்த 5 பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

லண்டனில் காடேரிவெல் பகுதியை சேர்ந்த 21 வயதான ஒட்டவேஷி தாதா என்ற இளைஞர், தன்னை வேண்டாம் என தூக்கி எறிந்த காதலி கேத்ரீனாவை (17) ஜூலை 12, 2018 இல் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அதிகமான முறை புகார் கொடுத்ததும் அலட்சியமாக இருந்த காரணத்தால் தான் மகள் இறந்துவிட்டாள் என கேடிரினாவின் தாய் கூறியிருந்தார்.

இதனையடுத்து, இரண்டு சார்ஜெண்டுகள் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் ஆய்வாளர்களால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கேத்ரீனா, ஒட்டவேஷியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சந்தித்து காதலித்து வந்துள்ளார். ஆனால் காதலனின் நடைமுறைகள் சரியில்லாத காரணத்தால் அவரை விட்டு பிரிவதாக கூறி விலகி சென்றுள்ளார்.

அதிக ஆண்களுடன் கேத்ரீனாவிற்கு தொடர்பு இருப்பதாலே தன்னை விட்டு பிரிந்து செல்வதாக நினைத்த ஒட்டவேஷி தன்னுடைய பிளாட்டில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்தான்.

கேத்ரீனா காதலை பிரிவதாக கூறிய பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 5 முறை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதில், ஒட்டவேஷி தனக்கு ஆபாசமாக திட்டி மெசேஜ் செய்வதுடன், கொலை செய்துவிடுவேன் என மிரட்டுவதாகவும் கூறியிருந்துள்ளார்.

ஆனால் பொலிஸார் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கேத்ரீனாவின் சகோதரன் ஜூலியஸ் (21) கூறுகையில், ஒட்டவேஷி ஒரு சைக்கோ. பொலிஸாரிடம் செல்ல கூடாது எனக்கூறி அடிக்கடி மிரட்டுவான். அவன் ஒருமுறை கேத்ரீனாவை ஆடையின்றி வீட்டிலிருந்து அடித்து வெளியேற்றினான். கால்டாக்சி பிடித்து செல்லுமாறு கட்டாயப்படுத்தி அனுப்பினான் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்