19 மாதங்களாக குளிர்சாதனப்பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடல்: வெளியான மற்றொரு அதிர்ச்சி தகவல்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் சிறுமியை கொலை செய்து உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த சம்பவம் போல, 27 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் கடந்த 2000ம் ஆண்டு தொடர் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, 16 வயதான லெயேன் திர்ரன் என்கிற சிறுமி கொலை செய்யப்பட்டார்.

அவருடைய உடல் 19 மாதங்களாக ஒரு குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ஜான் டெய்லர் என்கிற 62 வயது நபரை கைது செய்து பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அங்கு விசாரணையை கேட்டறிந்த நீதிபதி, குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய துப்பறிவாளர் கிறிஸ் கிளார்க், லெயேன் கொலை செய்யப்பட்டு குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை போலவே 1991ம் ஆண்டு டோன ஹீலி என்கிற 18 வயது இளம்பெண்ணின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.

1988ம் ஆண்டு மகள் காணாமல் போனதாக அவருடைய பெற்றோர் புகார் கொடுத்தனர். பின்னர் புதுப்பிக்கப்பட்ட ஒரு மருத்துவமனையின் கீழ் பகுதியில், காற்றுப்புகாத ஒரு இடத்தில் அவருடைய உடல் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

2004-ல் டி.என்.ஏ சோதனைக்கு பின்னரே அந்த உடல் டோனவினுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் இந்த கொலைக்கும் டெய்லருக்கும் சம்மந்தம் இருப்பதை போல தோன்றுவதால், வழக்கினை மீண்டும் விசாரிக்க உள்ளோம்.

அதோடு சேர்த்து லிண்ட்சே ரிமர் (13), யவ்ன் ஃபிட் (33), மற்றும் டெபோரா வூட் (20) ஆகியோரின் இறப்புகளையும் மறுபரிசீலனை செய்து விசாரிக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்