தினமும் சிறுநீரில் முடியை கழுவிய பெண்ணுக்கு நடந்த ஆச்சர்ய சம்பவம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா
1686Shares

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய முடியை சிறுநீரில் கழுவதால் மிகவும் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த இயற்கையின் ரசிகையான மிரியம் (34) என்ற பெண் தன்னுடைய 20 வயதில் இந்தியாவிற்கு வருகை தரும்போது, பீட்டர் (64) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தம்பதியினர் இருவரும் தங்களுடைய உடமைகளை 40,000 பவுண்டுகளுக்கு விற்றனர்.

பின்னர் அதிலிருந்து கிடைத்த பணத்தை வைத்து வருடத்திற்கு £ 3,000 பவுண்டுகள் என செலவு செய்து, உலகம் முழுவதையும் சுற்றி பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக தங்குவதற்கு நிரந்தர வீடோ, உடமைகளோ கிடையாது.

சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, தன்னுடைய முடியை சிறுநீரில் கழுவதாக மிரியம் தெரிவித்திருந்தார்.

மேலும், அது தனக்கு நல்ல பளபளப்பை கொடுப்பதாவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பத்திரிகையாளர் பெவர்லி டர்னர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தானும் முடியை தன்னுடைய சிறுநீரில் கழுவுவதாக கூறியுள்ளார்.

மிரியம் பேசிய நிகழ்ச்சியை பார்த்த அவர், தானும் அதனை செய்து பார்க்க முயற்சித்துள்ளார். ஒருநாளைக்கு 20 நிமிடம் என சிறிய கப்பில் தன்னுடைய சிறுநீரகத்தை எடுத்து முடியை அலசி வருகிறார். இதனால் தன்னுடைய முடி மிகுந்த பளபளப்புடன் காணப்படுவதாகவும், தற்போது எந்த ஷாம்பும் தனக்கு தேவைப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பத்திரிகையாளர் பெவர்லி, ஒலிம்பிக் பந்தய வீரரான ஜேம்ஸ் கிராக்னலை திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்