ஐ லவ் யூ சொன்ன பெண், கட்டியணைத்த ஹரி: ஒரு லவ் வீடியோ

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நம் இருவரின் தலை முடியும் ஒரே நிறம், ஹரி, ஐ லவ் யூ! என்ற வாசகம் அடங்கிய அட்டை ஒன்றை கையில் ஏந்தியிருந்த ஒரு பெண்ணைக் கண்டதும், அவள் அருகே பிரித்தானிய இளவரசர் ஹரி சென்று, உன் தலை முடியின் நிறம் எனக்கு பிடித்திருக்கிறது என்று கூற, பதிலுக்கு அந்த பெண், ஐ லவ் யூ என்று கூற, அவளைக் கட்டியணைத்துக் கொண்டார் ஹரி.

அந்த பெண்ணின் வயது நான்கு என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

சிலை ஒன்றை திறந்து வைப்பதற்காக செல்லும் வழியில், கூடியிருந்த மக்களுடன் இளவரசர் ஹரியும் அவரது கர்ப்பிணி மனைவி மேகனும் சுமார் 45 நிமிடங்கள் அளவளாவினர்.

அந்த நேரத்தில்தான் Eliza Morris என்னும் குட்டிப்பெண், நம் இருவரின் தலை முடியும் ஒரே நிறம் ஹரி, ஐ லவ் யூ என்ற வாசகம் அடங்கிய அட்டை ஒன்றை கையில் ஏந்தியவாறு ஹரியின் பார்வை தன் மீது படாதா என எதிர்பார்த்து நின்றாள்.

அவளைக் கண்ட ஹரி அவள் அருகே செல்ல, அவள் ஐ லவ் யூ என்று சொல்ல, ஹரி அவளைக் கட்டியணைத்துக் கொள்ள, ஹரியின் பார்வை தன்மீது படாதா என்று காத்திருந்த Eliza நடந்ததை நீண்ட காலத்திற்கு மறக்கமாட்டாள் என்றே தோன்றுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்