£2,000 மதிப்புள்ள திருமண மோதிரத்தை மண்ணில் புதைத்து வைத்த மணமகன்: மணமகள் செய்த செயல் என்ன?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் £2,000 மதிப்புள்ள திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை மணமகன் புதைத்து வைத்த நிலையில் அதை மணபெண் கஷ்டப்பட்டு கண்டுப்பிடித்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

Wendover நகரை சேர்ந்தவர் ஜமீலி ஸ்வைன்சன் (31). இவருக்கும் ஹாரீட் ஹாசீலீர் (30) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில் £2,000 மதிப்புள்ள திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை மணமகன் ஜமீலி வாங்கினார்.

பின்னர் புல்வெளிகள் படர்ந்த பெரிய மைதானத்தில் உலோக பெட்டி ஒன்றுக்குள் மோதிரத்தை மூடி வைத்த ஜமீலி அதை ஒரு இடத்தில் புதைத்தார்.

இதையடுத்து தனது வருங்கால மனைவி ஹாரீடிடம் metal detector எனப்படும் உலோகத்தை கண்டுபிடிக்கும் கருவியை கொடுத்த ஜமீலி மோதிரத்தை கண்டுப்பிடிக்க சொன்னார்.

இதன்பின்னர் மோதிரத்தை ஹாரீட் தேட தொடங்கிய நிலையில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் வெற்றிகரமாக கண்டுப்பிடித்தார்.

இதனால் ஜமீலி மகிழ்ச்சியில் ஆழ்ந்த நிலையில் ஹாரீடிடம் இருந்த மோதிரத்தை வாங்கி அவரிடமே தனது காதலை வெளிப்படுத்தி அசத்தினார்.

இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற்றவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்